உலகம் முழுவதும் மக்களை சிரிக்க வைக்கும் ஒரு சிறிய செயல் என்றால் அது “பிராங்க்” வீடியோக்கள்தான். மற்றவர்களை காயப்படுத்தாமல், சிரிப்பை பரப்பும் இந்த விதமான நகைச்சுவை முயற்சிகள் சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பை பெறுகின்றன.

தற்போது, தனது சொந்த தாயை பிராங்க் செய்ய நினைத்த இரண்டு சிறுமிகள் எடுத்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், மூத்த சிறுமி அறைக்குள் சென்று “அம்மா, தங்கை டிவியை உடைத்துவிட்டாள்!” என்று கூறுகிறாள். அதைக் கேட்ட தாய் அதிர்ச்சியுடன் ஓடிவந்து, டிவி திரை நொறுங்கி கிடப்பதை பார்த்து அதிர்ச்சியில் தனது குழந்தையை தூக்கி சோபாவில் வீசுகிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Sajjad_😈👑 (@ahmad.__.sajjad)

“>

அந்தச் சம்பவம் அதிர்ச்சியாக முடியுமோ என நினைத்தவுடன், டிவி திரையில் திடீரென பேய் தோன்றும் காட்சி வெளிப்படுகிறது. உண்மையில் அது ஒரு “எடிட் செய்யப்பட்ட போலி வீடியோ; இறுதியில் பேய் போல தோன்றும் சிறிய காட்சியுடன் அமைக்கப்பட்ட அதிரடி பிராங்க். அதைக் கண்டு தாய் பதறி அறைக்குள் ஓடிவிட, காண்போர் சிரிப்பை அடக்க முடியாமல் சிரிக்கிறார்கள். அந்த பிராங்க் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, “இது தான் நகைச்சுவையின் அழகு!” என நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.