உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சி நகரில் நடந்த அதிர்ச்சி சம்பவம், தற்போது ‘எக்ஸ்’ (X) தளத்தில் வைரலாகப் பரவி வருகிறது. சிறுமி ஒருவர் தனது தாயுடன் வீட்டின் வாசலில் நின்று கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்களில் ஒருவர் சாலையில் இறங்கி சிறுமியின் அருகே வந்துள்ளார்.
Shocking incident in Jhansi, UP: CCTV captures a young girl being harassed outside her home. Family files complaint, leading to swift police action—both accused arrested and reportedly given a good treatment by police
pic.twitter.com/35rJq3WiRA— Ghar Ke Kalesh (@gharkekalesh) December 16, 2025
அந்த நபர் சிறுமியிடம் தவறான முறையில் அத்துமீறித் தொட்டுவிட்டு உடனடியாக அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார்.இந்தச் சம்பவம் முழுவதுமாக சிசிடிவி கேமராவில் பதிவானது. இந்த காணொளியின் அடிப்படையில் சிறுமியின் குடும்பத்தினர் புகார் அளிக்க, காவல்துறை விரைந்து செயல்பட்டு சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு குற்றவாளிகளையும் கைது செய்தது.
