மழையில் உணவு விநியோகம் செய்ய வந்த சொமாட்டோ ஊழியர் ஒருவர், தனது தாயார் கடுமையான உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதை நினைத்து வாடிக்கையாளரான பாண்டே என்பவரிடம் அழுதுள்ளார். இதற்கு முன்பு ஒருமுறை கூட விமான நிலையத்திற்குச் சென்றிராத அந்த ஊழியருக்கு உதவ நினைத்த பாண்டே, உடனடியாக 4,000 ரூபாய் செலவில் விமான டிக்கெட் எடுத்து கொடுத்துள்ளார்.
மேலும், அவர் குழப்பமின்றி பயணிக்க தன் நண்பர் ஒருவரையும் விமான நிலையத்திற்கு அனுப்பி உதவி செய்தார். இதன் மூலம் விரைவாகத் தன் ஊருக்குச் சென்றடைந்த அந்த ஊழியர், மறுநாள் காலையிலேயே பாண்டேவை அழைத்து, மருத்துவர்கள் தன் தாயார் ஆபத்துக் கட்டத்தைத் தாண்டிவிட்டதாகக் கூறிய மகிழ்ச்சியான செய்தியைப் பகிர்ந்துள்ளார்.
அதன்பின்னர், தாயாரின் உடல்நிலை முழுமையாகக் குணமடைந்ததும், அந்த டெலிவரி ஊழியர் தனக்கு உதவியாகப் பெற்ற 4,000 ரூபாயையும் நேர்மையுடன் பாண்டேவின் கணக்கிற்குத் திருப்பி அனுப்பியுள்ளார். ஆனால், பாண்டே அந்தப் பணத்தை உடனடியாக அவருக்கே மீண்டும் அனுப்பிவிட்டு, இந்த உதவி கைமாறு எதிர்பாராமல் செய்யப்பட்டது என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் பாண்டேவின் மனிதநேயத்தையும், அந்த டெலிவரி ஊழியரின் நேர்மையையும் விவரிக்கும் இந்த நெகிழ்ச்சியான சம்பவம் சமூக வலைதளங்களில் பலரது பாராட்டுகளைப் பெற்று வைரலாகி வருகிறது.
