பிரபல நடிகரான சூர்யா அகரம் பவுண்டேஷன் மூலம் ஏழை எளிய மாணவர்களை படிக்க வைக்கிறார். அகரம் பவுண்டேஷனில் படித்த மாணவர்கள் தற்போது பல்வேறு பிரபல நிறுவனங்களில் வேலை பார்க்கின்றனர். பலர் டாக்டராகவும் உள்ளனர்.
அகரம் பவுண்டேஷனின் 20-வது ஆண்டு விழா நேற்று சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் சூர்யா, கார்த்தி, சிவகுமார், ஜோதிகா, நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் வெற்றிமாறன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று மாணவி ஒருவர் மேடையில் பேசியபோது நடிகர் சூர்யா கண்கலங்கினார். அந்த மாணவி கூறியதாவது, நான் படிப்பதற்கு உதவி கேட்டு அகரம் பவுண்டேஷன் சென்றேன். எனக்கு உதவி செய்தார்கள். நன்கு படித்தேன். நான் அண்ணா யுனிவர்சிட்டி கோல்டு மெடலிஸ்ட்.
நல்ல வேலை கிடைத்தது. அனுபவம் கிடைத்தது. என் அப்பா அம்மா நிம்மதியாக தூங்க வீடு கட்ட வேண்டும் என ஆசைப்பட்டேன். இப்போது ஒரு பெரிய வீடு கட்டி விட்டேன் என மகிழ்ச்சியுடன் கூறினார். இதனை கேட்டு சூர்யா கண்கலங்கி கைதட்டி அந்த மாணவியை ஊக்கப்படுத்தினார். இதோ அந்த வீடியோ …
View this post on Instagram
