பட்டியலினத்தவர்கள் குறித்து அவதூறாக பேசி நடிகை மீரா மிதுன் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பான வழக்கில் மீரா மித்துனை கைது செய்து ஆகஸ்ட் 11ஆம் தேதி ஆஜர்படுத்த சென்னை மத்திய குற்ற பிரிவுக்கு முதன்மை ஆய்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிடிவாரண்ட் பிறப்பித்து மூன்று ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த மீரா மிதுன் டெல்லியில் இருப்பதாகவும் அவரை மீட்க கோரியும் அவரது தாய் மனு அளித்திருந்தார். இதையடுத்து நீதிமன்றம் அவரை பிடிக்க உத்தரவிட்டது. அதன்படி டெல்லி காவல்துறையினர் மீரா மிதுனை பிடித்து அங்குள்ள அரசு காப்பகத்தில் வைத்துள்ளனர் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.