தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை தமன்னா. இவர் தற்போது தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளம் வைத்துள்ளார். 16 ஆண்டுகளாக சினிமாவில் நடித்த வரும் இவர் ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்கு நான்கு கோடி சம்பளம் வாங்குவதாக கூறப்படுகின்றது.

சமீபத்தில் கூட ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தில் காவலா பாடல் மூலம் தமன்னா ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமாகிவிட்டார். இந்நிலையில் தமன்னாவின் சொத்து மதிப்பு 120 கோடிக்கு மேல் உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது. மேலும் தமன்னா மும்பையில் 16 கோடி மதிப்பிலான அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.