நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் நெல்சன் திலீப் குமார் கூட்டணியில் உருவான திரைப்படம் ‘ஜெயிலர்’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ‘ஜெயிலர்’ திரைப்படம் வரும் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.’ஜெயிலர்’ திரைப்படம் வெளியாகி வசூல் சாதனை புரிந்து வரும் நிலையில், நடிகர் ரஜினிகாந்த் இமயமலை பயணம் மேற்கொண்டுள்ளார்.

பயணத்தின்போது குடும்ப உறுப்பினர்கள் யாரையும் அழைத்துச் செல்லாமல் தன் நண்பர்கள் மூவரை மட்டும் அழைத்து சென்றுள்ளார். மக்களோடு மக்களாக இயல்பான பயணம் மேற்கொண்ட அவருடன், போகும் வழியில் எல்லாம் ரசிகர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள்.