முன்னணி தொழில்நுட்ப நிறுவனமாக திகழும் ஆப்பிள் நிறுவனம் பென்சில் 3 என்ற புதிய தலைமுறை பென்சிலை அறிமுகம் செய்துள்ளது . இந்தப் பென்சில் USB type C போர்டை ஆதரிக்கும் நிலையில் இந்த போர்டு ஸ்லைடிங் கேப் டிசைன் உடன் வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பென்சிலை இறுதியில் ஐபேட் உடன் இணைக்கலாம். இந்தப் பென்சிலை ஐ பேடின் பக்க விளிம்பில் பாதுகாப்பாகவும் நினைக்க முடியும். வயர்லெஸ் கனெக்சன், சென்சிடிவ், சார்ஜிங் போன்ற பல அம்சங்கள் இதில் வழங்கப்பட்டுள்ளன.

இந்திய சந்தையில் இந்த பென்சிலின் விலை 7900 ஆகும். இந்த பென்சில் ஏற்கனவே இந்தியாவில் கிடைக்கும் நிலையில் ஆப்பிள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து வாங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கல்வி திட்டத்தின் கீழ் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இந்த புதிய பென்சிலை வெறும் 6999 ரூபாய்க்கு வாங்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.