உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வரும் நிலையில் பயணர்களின் வசதிக்கு ஏற்றவாறு சமீபத்தில் மெட்டா நிறுவனம் புதிய அம்சத்தை வெளியிட்டது. இது Backups, cloud service இல்லாமல் தங்களுடைய whatsapp சேட்டை ஒரு தொலைபேசியில் இருந்து மற்றொரு தொலைபேசிக்கு எளிதில் மாற்ற முடியும். இந்த புதிய முறை க்யூ ஆர் குறியீடுகளை பயன்படுத்தி செயல்முறையை மிக எளிதாக்கிவிடும். இந்த புதிய அம்சம் மூலமாக payment message and call history மாற்ற முடியாது என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம்.

உங்களது பழைய ஃபோனில் முதலில் வாட்ஸ் அப்பை திறக்க வேண்டும்.

பிறகு  Options > Settings > Chats > Chat Transfer என்பதற்குச் சென்று start என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

புதிய போனில் அதே தொலைபேசி எண்ணை பயன்படுத்தி ரிஜிஸ்டர் செய்து கொள்ள வேண்டும்.

பழைய மொபைலில் இருந்து உங்களுடைய சத் history மாற்றுவதற்கு start என்பதை தேர்ந்தெடுத்து உங்கள் சாதனத்துடன் கியூ ஆர் குறியீட்டை ஸ்கேன் செய்ய தேவையான அனுமதிகளை வழங்க வேண்டும்.

பிறகு இணைப்பு நிறுவப்பட்டதும் transfer process தொடங்கும்.

Import chat செய்யப்பட்டதும் done என்பதை கிளிக் செய்தால் உங்களுடைய சாட் அனைத்தும் புதிய போனில் அப்டேட் ஆகிவிடும்.