இந்தியாவின் முன்னணி பணக்காரர்களில் ஒருவராக திகழ்பவர் முகேஷ் அம்பானி. இவர் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் தலைவர். இவருக்கு 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் இருக்கும் நிலையில், மூத்த மகன் ஆகாஷ் மற்றும் மகளுக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து விட்டது. இதில் மூத்த மகன் ஆகாஷுக்கு ஒரு மகனும், மகளுக்கு இரட்டை குழந்தைகளும் இருக்கிறார்கள்.

இந்நிலையில் தற்போது முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்துக்கு ராதிகா என்பவரிடம் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. இவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெற இருக்கும் நிலையில் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகாவின் நிச்சயதார்த்தத்தில் ஏராளமான பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளார்கள். மேலும் இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Media