நடிகை சுஷ்மிதா சென் 1997 ஆம் ஆண்டு வெளிவந்த ரட்சகன் என்ற திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். இவர் முன்னாள் உலக அழகியும் ஆவார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து அவருக்கு தமிழில் சரியான வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் பாலிவுட் பக்கம் சென்ற அவர் பிரபல நடிகையாக வளம் வந்தார். 2000ம் ஆண்டு ரேனீ என்ற பெண்ணை தத்தெடுத்து வளர்த்தார். அதன் பிறகு 2019 ஆம் ஆண்டு அலிசா என்ற பெண்ணை தத்தெடுத்து வளர்த்தார்.

இவ்வாறு திருமணம் செய்யாமல் இவர் குழந்தையை மட்டும் தத்தெடுத்து வளர்த்து வருகின்றார். இவர் ஆடம்பர கார்களை வாங்குவதில் அதிக விருப்பம் உள்ளவர். இந்த நிலையில் தற்போது 1.6 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய சொகுசு காரை விலைக்கு வாங்கி இருக்கின்றார். மேலும் அதை தனக்கு தானே பரிசாகவும் கொடுத்துக் கொண்டார். புதிய காரை ஓட்டி பார்த்து மகிழ்ந்த அவர், அதன் அனுபவங்கள் குறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் பின் தொடரும் ரசிகர்களுக்கு பகிர்ந்திருக்கின்றார்.