தொழிலதிபர் அனில் அம்பானிக்குச் சொந்தமான சுமார் 19,344 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை (ED) அதிரடியாக முடக்கியுள்ளது.
வங்கி மோசடி தொடர்பான வழக்கில் இந்த கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒரு நிறுவனத்தின் பெயரில் வங்கிக் கடன் பெற்று, அந்தப் பணத்தைச் சட்டவிரோதமான முறையில் தனது மற்ற நிறுவனங்களுக்குப் பரிமாற்றம் செய்ததாக அனில் அம்பானி மீது குற்றம் சாட்டப்பட்டது.
சுமார் 17,000 கோடி ரூபாய் அளவுக்குப் பண மோசடி நடந்திருப்பதாகக் கூறி ஏற்கனவே சிபிஐ (CBI) வழக்குப் பதிவு செய்திருந்த நிலையில், தற்போது சட்டவிரோதப் பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் தனது பிடியை இறுக்கியுள்ளது.
இதன் தொடர்ச்சியாகவே, தற்போது மொத்தம் 19,344 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டு அனில் அம்பானிக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
