வழக்கு ஒன்றிற்காக ஆஜராக வந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம், சாட்டை துரைமுருகன் நாம் தமிழர் கட்சியை கைப்பற்றப்போவதாக வரும் தகவல் குறித்து கேட்டபொழுது, இந்த தகவலை பரப்பியது யார்? பாஜக, திமுக ஆதரவு ஊடகங்கள்தானே. எவ்வளவோ பார்த்துட்டோம் இதை பார்க்கமாட்டோமா? என கூறியுள்ளார்.

மேலும் கூட்டணி குறித்த கேள்விக்கு தேர்தலில் யாருடன் கூட்டணின்னு கேட்கிறீர்களா, நான் அமெரிக்க அதிபர் பைடனுன் கூட்டணி வைக்கலாம்ன்னு இருக்கேன் என கிண்டலாக பதிலளித்துள்ளார்.