தேமுதிக யாருடன் கூட்டணி அமைக்கும் என்று அரசியல்வட்டாரங்களில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில் தற்போது விஜயகாந்த் உருவ ஒற்றுமையுடன் இருக்கும், அவரது சாயலில் வட்டாரமொழியில் அழகாக அரசியல் மேடைகளில் பேசும் அவரது மகன் விஜய பிரபாகரனை, விஜயகாந்த் சொந்த ஊரான மதுரை மக்களவைத் தேர்தலில் போட்டியிட வைக்க வேண்டும் என்று கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தியதாக தெரிகிறது. இதனால் யாருடன் கூட்டணி அமைந்தாலும், மதுரையில் விஜய பிரபாகரன் போட்டியிடுவார் என்று தெரிகிறது.