தை அமாவாசையை ஒட்டி ராமேஸ்வரம் செல்ல ஏதுவாக சென்னையில் இருந்து ஒருநாள் முன்னதாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று 8ஆம் தேதி கிளாம்பாக்கம், சேலம், கோவை, பெங்களூருவில் இருந்து ராமேஸ்வரத்துக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

பிப்ரவரி 9ஆம் தேதி தை அமாவாசையை ஒட்டி பக்தர்கள் அதிகளவில் கோவிலுக்கு செல்வார்கள். தை மாதத்தில் வரும் அமாவாசை முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க உகந்த நாளாகும். இதனையொட்டி, பக்தர்களின் வசதிக்காக, ராமேஸ்வரம் செல்ல ஏதுவாக சென்னையில் இருந்து ஒருநாள் முன்னதாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.