மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் பதற்றத்தைத் தணிக்க, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே அமைதிப் பேச்சுவார்த்தைகள் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் நடைபெற்று வந்தன.

இந்தப் பேச்சுவார்த்தைகள் குறித்து ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது காலிபாப் தனது எக்ஸ் (X) தளத்தில் ஒரு பகீர் பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில், “ஈரானுக்கு அமைதியை நிலைநாட்ட முழு மனதும், விருப்பமும் உள்ளது. ஆனால், கடந்த இரண்டு போர்களின் கசப்பான அனுபவங்களால் அமெரிக்காவை எங்களால் முழுமையாக நம்ப முடியவில்லை,” என்று டொனால்ட் டிரம்ப் மற்றும் அமெரிக்காவின் கடந்தகால நடவடிக்கைகள் குறித்து அவர் மறைமுகமாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், ஈரான் பேச்சுவார்த்தைக் குழுவின் நம்பிக்கையை அமெரிக்கக் குழுவால் பெற முடியவில்லை என்றும், அமெரிக்காவால் எட்ட முடியாத தூரத்திலேயே அந்த நம்பிக்கை உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதேசமயம், இந்தப் பேச்சுவார்த்தையை முன்னெடுத்து நடத்திய பாகிஸ்தானின் அமைதி முயற்சிகளுக்கு அவர் தனது நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டுள்ளார்.