கடல் பரப்பில் தனது ஆதிக்கத்தைச் செலுத்தத் துடிக்கும் சீனா, இப்போது அமெரிக்காவையே அதிர வைக்கும் வகையில் ஒரு புதிய ‘எலக்ட்ரோ மேக்னடிக்’ (Electromagnetic) தொழில்நுட்பத்தை தனது ‘புஜியான்’ என்ற போர்க்கப்பலில் அறிமுகப்படுத்தியுள்ளது.
சாதாரணமாகப் போர் விமானங்கள் கப்பலில் இருந்து கிளம்பும்போது அல்லது தரையிறங்கும்போது அதிக நேரம் எடுக்கும், ஆனால் சீனாவின் இந்த புதிய சிஸ்டம் மூலம் வெறும் 0.2 வினாடிகளில் 30 டன் எடை கொண்ட போர் விமானத்தை 170 மைல் வேகத்தில் இருந்து அப்படியே ‘ஸ்டாப்’ செய்ய முடியுமாம்.
Can an electromagnetic method bring a speed of 170 mph to 0 in 0.2 seconds? China’s new electromagnetic arresting device stopped a 30-ton fighter jet traveling at 170 mph in 0.2 seconds.pic.twitter.com/nqNPSFGKl8
— Massimo (@Rainmaker1973) February 15, 2026
நீராவி மூலம் இயங்கும் பழைய முறையைத் தூக்கி எறிந்துவிட்டு, காந்த விசை மூலம் இயங்கும் இந்த நவீன தொழில்நுட்பம் மூலம் கனரக ஆயுதங்கள் மற்றும் முழு எரிபொருளுடன் விமானங்களை மிக எளிதாக ஏவ முடியும்.
இது சீனாவின் கடற்படை வலிமையைச் சர்வதேச அளவில் பல மடங்கு உயர்த்தியுள்ளதாக ராணுவ நிபுணர்கள் கருதுகின்றனர். இருப்பினும், அமெரிக்காவின் இதேபோன்ற தொழில்நுட்பத்தில் அவ்வப்போது சில கோளாறுகள் ஏற்படுவதால், சீனாவின் இந்த ‘மேஜிக்’ கருவி எந்த அளவுக்குத் துல்லியமாகச் செயல்படும் என்பதை உலக நாடுகள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன.
