உலக நாடுகளுக்கிடையே ஆப்பிரிக்கக் கண்டத்தில் ஆதிக்கம் செலுத்துவதில் கடும் போட்டி நிலவி வரும் சூழலில், இந்தியா தனது பொருளாதார பலத்தை அதிரடியாக நிரூபித்துள்ளது. இந்தியாவின் எக்ஸிம் வங்கி (Exim Bank), ஆப்பிரிக்க நிதிச் சங்கத்திற்கு (AFC) சுமார் 100 மில்லியன் டாலர், அதாவது இந்திய மதிப்பில் சுமார் ₹900 கோடி கடனுதவி வழங்கியுள்ளது.

ஆப்பிரிக்காவின் உள்கட்டமைப்பு மற்றும் தொழில்முறைத் திட்டங்களை மேம்படுத்த இந்த நிதி பயன்படுத்தப்பட உள்ளது. ஏற்கனவே சீனா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆப்பிரிக்காவில் தங்கள் கால்தடத்தைப் பதிக்க மல்லுக்கட்டி வரும் நிலையில், இந்தியாவின் இந்த மெகா கடன் ஒப்பந்தம் அந்த நாடுகளுக்குப் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

மருந்துகள், விவசாயம், தொழில்நுட்பம் எனப் பல்வேறு துறைகளில் இந்திய நிறுவனங்கள் ஏற்கனவே ஆப்பிரிக்காவில் கொடிகட்டிப் பறக்கும் நிலையில், இந்த நிதி உதவி இந்தியாவின் வியூகத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

இதன் மூலம் ஆப்பிரிக்காவின் சாலைகள், துறைமுகங்கள் மற்றும் மின்சாரத் திட்டங்களில் இந்தியாவின் பங்களிப்பு அதிகரிக்கப் போவது உறுதி எனப் பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர்.