இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலானவர்களுக்கு அமெரிக்காவில் பணிபுரிய வேண்டும் என்பது கனவாக உள்ளது. அப்படி தங்களுடைய கனவை நனவாக்கி பெரும்பாலானோர் அங்கே பல துறைகளிலும் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்காவில் பணிபுரியும் இந்திய ஐடி ஊழியர்களுக்கு நல்ல செய்தியை கொடுத்துள்ளது அந்நாட்டு அரசு.

தேசிய விசா புதுப்பித்தல் என்ற பெயரில் H-1B, L1 விசாக்களை அமெரிக்காவிலேயே புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை H-1B விசாவை புதுப்பிக்க சொந்த நாடு செல்ல வேண்டி இருந்தது. இந்நிலையில் 2004க்கு முன் இருந்த ‘உள்நாட்டிலேயே விசா புதுப்பித்தல்’ முறையை மீண்டும் கையில் எடுத்துள்ளது அமெரிக்கா.