உக்ரைன் ரஷ்யா போர் தொடங்கி ஒரு வருடம் நிறைவடைய போகின்றது. இந்த நிலையில் இன்று ரஷ்யா ரஷ்யாவால் ஏவப்பட்ட இரண்டு ராணுவ ஏவுகணைகள் உக்ரைன் நாட்டிற்குள் வருவதற்கு முன்பாக ரோமானியா மற்றும் மால்டோவன் ஆகிய நாடுகளின் வான் பரப்புக்குள் நுழைந்துள்ளது. இந்த தகவலை உக்ரைனிய உயர்மட்ட ஜெனரல் தெரிவித்துள்ளார். இது குறித்து உக்ரைனின் ஆயுதப் படைகளின் தலைமை தளபதியான வலேரி கூறியதாவது “கருங்கடலில் இருந்து இரண்டு காலிஃபர் ஏவுகணைகள் ஏவப்பட்டது.

இந்த இரண்டு ஏவுகணைகளும் உக்ரைனுக்குள் வருவதற்கு முன்பாக மால்டோவன் மற்றும் ருமேனியா ஆகிய நாடுகளின் வான் பரப்பில் நுழைந்தது” என்று அவர் கூறியுள்ளார். மேலும் இது தொடர்பாக உக்ரைனின் செய்தி தொடர்பாளர் பிரபல பத்திரிகை ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது “ரஷ்ய ராணுவ ஏவுகணைகளை சுட்டு வீழ்த்த உக்ரைனிடம் திறன் உள்ளது. ஆனால் அத்துமீறி நுழைந்த ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தும் போது வெளிநாடுகளில் உள்ள பொது மக்களுக்கு ஏதேனும் ஆபத்து ஏற்படுமோ என்று கருதியே அந்தத் திட்டத்தை உக்ரைன் கைவிட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.