உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ அதேஷ் கான்.இவருடைய செல்போனுக்கு உள்துறை மந்திரி அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா பேசுவதாக கூறி ஒரு அழைப்பு வந்துள்ளது. அதாவது ஜெய்ஷா பேசுவதாக கூறி அந்த எம்எல்ஏவிடம் 5 லட்ச ரூபாய் பணம் கேட்டுள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த பாஜக எம்எல்ஏ காவல் நிலையத்தில் புகார் கொடுக்கவே அவர்கள் நடத்திய விசாரணையில் அது மோசடி என்பது தெரியவந்தது.
இந்த வழக்கில் பிரியன்ஷு பண்ட் என்பவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய உவேஷ் அகமது என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இவர்கள் இதற்கு முன்பு பாஜக எம்எல்ஏக்களுக்கு அமைச்சர் பதவி வாங்கி தருவதாக கூறி பணமோசடியில் ஈடுபட முயன்றதும் தெரியவந்துள்ளது. மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
