மத்திய அமைச்சர் அமித்ஷாவின் சகோதரி ராஜேஸ்வரி பென் உடல்நல குறைவால் இன்று காலமானார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மும்பையில் உள்ள மருத்துவமனையில் நுரையீரல் அறுவை சிகிச்சை செய்து கொண்ட அவர் அதன் பிறகு வீட்டில் ஓய்வில் இருந்து வந்தார். இந்த நிலையில் திடீரென அவரது உடல்நிலை மோசமடைந்ததை தொடர்ந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனை தொடர்ந்து அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.