இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கியான sbi வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகையான சேவைகளை வழங்கி வருகிறது. அது மட்டும் அல்லாமல் வாடிக்கையாளர்களுக்கு உதவும் நோக்கத்தில் பல சிறப்பு திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி பசுமை திட்டங்களை ஊக்குவிப்பதற்காக SBI Green Rupee Term Deposit என்ற திட்டத்தை எஸ்பிஐ வங்கி அறிமுகம் செய்துள்ளது.

வழக்கமான டெபாசிட் திட்டங்களை விட இந்த திட்டத்தில் அதிக வட்டி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1111 மற்றும் 1777 நாட்கள் திட்டத்திற்கு 6.65% வட்டியும், 2222 நாட்களுக்கு 6.40 சதவீதம் பட்டியும் வழங்கப்படும் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் மூத்த குடிமக்களுக்கான சலுகைகளும் உண்டு.