தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள் இன்று இரவு தனது வீட்டில் எதிர்பாராதவிதமாகத் தவறி கீழே விழுந்ததில் அவருக்குக் காயம் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து, அவரது உறவினர்கள் அவரை உடனடியாக மீட்டு சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும், அவரது உடல்நிலை தற்போது கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.