சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோ, பார்ப்பவர்களின் ரத்தத்தைக் கொதிக்க வைக்கும் வகையில் அமைந்துள்ளது. ரயில் நிலையத்தில் பயணிகள் ரயிலுக்காகக் காத்திருந்தபோது, ரயில்வே பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் அங்கிருந்த பயணிகள் மீது கொடூரமான முறையில் லத்தியால் தாக்குதல் நடத்தியுள்ளார்.

மேலும் பயணிகள் ரயிலில் ஏறுவதற்காக வரிசையில் நின்று கொண்டிருந்தபோது, கூட்ட நெரிசலில் யாரோ ஒருவர் வரிசையிலிருந்து சற்று விலகியதற்காக, அந்த வீரர் ஆத்திரமடைந்து கண்மூடித்தனமாகத் தாக்கத் தொடங்கினார். இந்தச் சம்பவம் அங்கிருந்த பயணிகளிடையே பெரும் பீதியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்தக் காணொளி வெளியானதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட பாதுகாப்புப் படை வீரரின் மனிதாபிமானமற்ற செயலுக்கு எதிராகப் பொதுமக்கள் கடும் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். பயணிகளின் பாதுகாப்பிற்காகப் பணியமர்த்தப்பட்ட ஒருவரே, பொதுமக்களிடம் இவ்வளவு வன்முறையாக நடந்து கொள்வது அதிகார துஷ்பிரயோகத்தின் உச்சமாகக் கருதப்படுகிறது.