சென்னையில் கடந்த சில தினங்களாக ஆபரண தங்கத்தின் விலை உயர்ந்து வந்த நிலையில் இன்று விலை குறைந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 240 ரூபாய் வரையில் குறைந்து ஒரு சவரன் 94160 ரூபாய்க்கும், ஒரு கிராம் 11770 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் குறைந்து ஒரு கிராம் 12840 ரூபாய்க்கும், ஒரு சவரன் 102280 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலை இன்று கிராமுக்கு 4 ரூபாய் வரையில் அதிகரித்து ஒரு கிராம் 180 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 180000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.