மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் மோகன்லால். இவர் நடிப்பில் கடந்த 2013-ம் ஆண்டு திரிஷ்யம் என்ற திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் மீனா முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். த்ரிஷ்யம் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் சூப்பர் ஹிட் ஆனது. அதன்பிறகு தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளிலும் திரிஷ்யம் திரைப்படம் ரீமேக் செய்யப்பட்டது.

இப்படம் தமிழில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த பாபநாசம் என்ற பெயரில் வந்தது. இந்நிலையில் த்ரிஷ்யம் படம் தற்போது கொரிய மொழியில் ரீமேக் செய்யப்பட இருப்பதாக கேன்ஸ் பட விழாவில் தயாரிப்பு நிறுவனங்களான பனாரமா ஸ்டுடியோஸ் மற்றும் ஆந்தலாஜி ஸ்டுடியோஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் ஒரு இந்திய திரைப்படம் முதல்முறையாக கொரிய மொழியில் ரீமேக் செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.