தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கலில் நடைபெற்ற அரசு நிகழ்வில் பேசிய தமிழக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம், பாமக இளைஞரணி தலைவர் அன்புமணியை ‘சின்னய்யா’ என குறிப்பிடும் வகையில் கேலி கலந்த விமர்சனத்தை வைத்துள்ளார் .

“சின்னய்யா உரிமை கேட்க கிளம்பியிருக்கார்… தந்தையிடமா உரிமை கேட்கிறாறா ? என்பது தெரியவில்லை” என தெரிவித்தார். . நிகழ்வில் பங்கேற்ற பாமக  ஜி.கே.மணியும், அமைச்சர் பேச்சுக்குக் குலுங்கிக் குலுங்கி சிரித்தார்.