
தமிழகத்தில் பள்ளிகளில் ஐந்து முதல் 10 வயது வரையிலான மாணவர்களுக்கும், 10 வயது பூர்த்தி அடைந்த மாணவர்களுக்கும் தனித்தனியாக வங்கி கணக்கு தொடங்கப்பட வேண்டும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. 5 வயது பூர்த்தி அடைந்த குழந்தைகளுக்கு கட்டாயம் பயோமெட்ரிக் புதுப்பிக்க வேண்டும். 10 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு புதிதாக வங்கி கணக்கு தொடங்க மாணவர்களின் ஆதார் அடையாள அட்டை தேவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.