நடிகர் விஜய்யின் அரசியல் பயணம் குறித்து முதல்வர் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். ஸ்பெயின் நாட்டில் இருந்து முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஸ்பெயின் பயணம் சாதனை பயணமாக அமைந்தது. தமிழ்நாட்டுக்கு பல்வேறு முதலீடுகளை ஈர்த்து திரும்பி இருக்கிறேன் என்றார்.

விஜய் அரசியல் வருகை குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், மக்களுக்கு தொண்டாற்ற யார் அரசியலுக்கு வந்தாலும் நான் மகிழ்ச்சி அடைவேன் என அவர் தெரிவித்தார். முன்னதாக, மக்களவை தேர்தலில் I.N.D.L.A கூட்டணியின் வாக்கு வங்கியை கெடுக்க கூடாது. அதேசமயம் திமுகவின் பி டீம் போல செயல்பட கூடாது என்பதில் விஜய் உறுதியாக இருப்பதாக செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.