பிரபல விஜ யதொலைக்காட்சியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் தான் நடிகர் பாலா. இவருடைய காமெடிகளை ரசிப்பதற்கென்றே தனி ரசிகர் கூட்டம் இருக்கும். இது  ஒருபுறமிருக்க மறுபுறம்  இவர் தன்னால் முடிந்தவரை பலருக்கு உதவிகளையும் செய்துவருகிறார். அந்தவகையில் தற்போது ஈரோடு மாவட்டம் கடம்பூரை அடுத்த குன்றி உள்ளிட்ட 18 மலை கிராம மக்களின் மருத்துவ தேவைக்காக ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்துள்ளார்.

போதிய வாகன வசதிகள் இல்லாததால் பாம்பு கடி போன்றவற்றால் கிராம மக்கள் உயிரிழக்கும் அவல நிலை இங்கு நிலவுகிறது. இதனை அறிந்த நடிகர் பாலா, ரூ.5 லட்சம் செலவில் ஆம்புலன்ஸ் ஒன்றை வாங்கி அந்த கிராம மக்களுக்காக வழங்கியுள்ளார்.