திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள கழிவுநீர் தொட்டியில், பிறந்து சில மணி நேரமேயான பச்சிளம் ஆண் சிசு ஒன்று வீசப்பட்டுக் கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பகுதியிலிருந்து வந்த சத்தத்தைக் கேட்டு ஓடிவந்த மருத்துவமனை ஊழியர்களும் பொதுமக்களும், கழிவுநீர் தொட்டிக்குள் குழந்தை கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து உடனடியாக மீட்டனர்.
தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தையை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து தீவிர கண்காணிப்பில் வைத்துள்ளனர். இந்தக் கொடூர செயலில் ஈடுபட்ட கல்நெஞ்சக்கார தாய் அல்லது நபர் யார் என்பது குறித்து, மருத்துவமனையில் உள்ள சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆராய்ந்து போலீசார் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
