விஜய் ஆண்டனி நடித்த பிச்சைக்காரன் திரைப்படத்தின் வெற்றியை அடுத்து இப்போது “பிச்சைக்காரன் 2” படம் உருவாகி உள்ளது. இந்த படத்தில் விஜய் ஆண்டனி நடித்ததோடு மட்டுமின்றி டைரக்டும் செய்து இருக்கிறார். இதில் காவ்யா தப்பார், ராதா ரவி, ஒயி ஜி மகேந்திரன், மன்சூர் அலிகான், ஜான் விஜய், ஹரிஷ் பேரடி, யோகி பாபு உட்பட பலர் நடித்து உள்ளனர்.

இப்படம் கடந்த 19ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. அதுமட்டுமின்றி  பிச்சைக்காரன் -2 படம் வெளியான முதல் நாளில் தமிழில் ரூ.3.25 கோடியும் தெலுங்கில் ரூ 4.5 கோடிக்கு மேல் வசூல் செய்தது. இதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தது. இந்த நிலையில் நடிகர் விஜய் ஆண்டனி யாருமே சொல்லாத cringe விஷயங்கள் இருந்ததால் தான் பிச்சைக்காரன் படம் வெற்றி பெற்றது என்று கூறியுள்ளார்.