தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மூன்றாம் ஆண்டு தொடக்க விழா சென்னை பனையூரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் கட்சித் தலைவர் விஜய் தொண்டர்களிடையே உரையாற்றியதுடன், முக்கியப் பிரமுகர்களையும் கட்சியில் இணைத்துக் கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய விஜய், ஆளுங்கட்சியான திமுக-வை திருக்குறள் பாணியில் கடுமையாகச் சாடினார். அவர் பேசியதாவது:
“திருவள்ளுவர் இன்று உயிரோடு இருந்திருந்தால், தீய சக்திகள் குறித்து ஒரு குறள் எழுதியிருப்பார். ‘அநீதி, அராஜகம், தில்லுமுல்லு இவையெல்லாம் திமுக முதற்றே உலகு’ என்றுதான் அவர் பாடியிருப்பார். தீய சக்தியான திமுக-வைத் தூய சக்தியான தவெக வீழ்த்தும். எனது சொந்தங்களை யாராலும் விலை கொடுத்து வாங்க முடியாது என்று கூறினார்.
இதைத்தொடர்ந்து பேசிய அவர் காமராஜர், அண்ணா மற்றும் எம்ஜிஆர் அமர்ந்த இடத்தில் இவரா என மக்கள் கண்ணீர் வடிக்கின்றனர். எம்ஜிஆருக்கு இருந்த அனுபவம் விஜய்க்கு இருக்கிறதா என்று சிலர் கேட்கும் நிலையில் எம்ஜிஆர் அரசியலுக்கு வந்த போது கூட அவரிடமும் இதே கேள்வியைத்தான் கேட்டார்கள். 1977 போன்ற துருப்பிடித்த வியூகத்தை கையில் எடுக்கிறார்கள் முதலில் டோணிங்கை மாத்துங்க பாஸ். விசில் சின்னம் இல்லாத ஊரே இல்லை கண்டிப்பாக திமுகவை தமிழக வெற்றிக்கழகத்தால் மட்டும்தான் வீழ்த்த முடியும் என்று கூறினார்.
மேலும் முன்னதாக நடிகர் விஜய் விழாவில் கலந்துகொண்டபோது கலைஞர்களுடன் சேர்ந்து நடனமாடியது குறிப்பிடத்தக்கதாகும்.
