அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவெக-வில் இணைந்தது குறித்துப் பேசிய செல்லூர் ராஜூ, அவரை “செல்லாக் காசு” என்று விமர்சித்தது அரசியல் வட்டாரத்தில் தீயாய் பரவி வருகிறது. “செங்கோட்டையனை வேறு யாரும் ஏற்றுக் கொள்ளாததால்தான் அவர் தற்போது விஜய் கட்சியில் சேர்ந்துள்ளார்; அவர் எங்கு போனாலும் அதிமுக-விற்கு எந்தப் பாதிப்பும் இல்லை” எனத் தனது பாணியில் நக்கலாகப் பதிலளித்துள்ளார். ஏற்கனவே செல்வாக்கை இழந்தவர்களே இதுபோல கட்சி மாறுகிறார்கள் என்றும், அதிமுக இதைப் பற்றித் துளியும் கவலைப்படவில்லை என்றும் அவர் அதிரடியாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் ‘செல்லாக் காசு’ கமெண்ட் செங்கோட்டையன் ஆதரவாளர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தாலும், செல்லூர் ராஜூவின் பேச்சு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தேர்தல் நேரத்தில் மூத்த நிர்வாகிகள் கட்சி மாறுவதை அதிமுக தலைமை எப்படித் துச்சமாக நினைக்கிறது என்பதை இவரின் பேச்சு அப்பட்டமாகக் காட்டியுள்ளது. “போகிறவர்கள் போகட்டும், இருப்பவர்கள் கெட்டியாக இருப்போம்” என்ற ரீதியில் செல்லூர் ராஜூ கொடுத்த இந்தப் பேட்டி இப்போதைய ஹாட் டாபிக்!
