தமிழக அமைச்சரவை விரிவாக்கத்தின் போது அமைச்சராகப் பதவியேற்ற கிள்ளியூர் ராஜேஷ், தனது பதவியேற்பு உறுதிமொழியை முடித்தவுடன் பெருந்தலைவர் காமராஜர் வாழ்க,  “ராஜீவ் காந்தி வாழ்க!”, ராகுல்காந்தி வாழ்க  என்று திடீரென அரசியல் முழக்கமிட்டதால் ஆளுநர் மாளிகையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ராஜேஷின் இந்த எதிர்பாராத செய்கையால் கடும் அதிருப்தியடைந்த ஆளுநர், உடனடியாக அவரை மேடையிலேயே தடுத்து நிறுத்தி, “அது உங்கள் பதவியேற்பு உறுதிமொழியின் பகுதி அல்ல (That is Not a Part of your Oath)” என்று மிகக் கடுமையான தொனியில் கண்டித்து ‘பகீர்’ கிளப்பினார்.

மேலும், ஆளுநர் மாளிகையின் நெறிமுறைகளை மீறி அரசியல் முழக்கங்களைத் தவிர்த்துவிட்டு, முறைப்படியாக மட்டுமே நடந்துகொள்ள வேண்டும் என்று ஆளுநர் கறாராக எச்சரித்ததைத் தொடர்ந்து, அமைச்சர் கிள்ளியூர் ராஜேஷ் சற்றே அதிர்ச்சியுடன் மேடையை விட்டு நகர்ந்தார்.

“>