நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையே விவாகரத்து தொடர்பான செய்திகள் இணையத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. நடிகை ஒருவருடன் ஏற்பட்ட நெருக்கமே இதற்கு காரணம் என சங்கீதா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், சமீபத்தில் ஒரு திருமண விழாவில் விஜய் மற்றும் த்ரிஷா ஒன்றாகக் கலந்துகொண்டது இந்த விவாதத்தை இன்னும் சூடாக்கியது.

இது குறித்துப் பேசிய விஜய், தற்போது நடக்கும் பிரச்சினைகள் குறித்து கவலைப்பட வேண்டாம் என்றும், அது அவ்வளவு “வொர்த்” இல்லை என்றும் குறிப்பிட்டிருந்தார். 25 ஆண்டுகள் கூடவே இருந்த மனைவியை விஜய் இப்படிக் குறிப்பிட்டது தவறுஎன ரஞ்சனா நாச்சியார் போன்ற அரசியல் பிரமுகர்களும் சமூக வலைதளவாசிகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்தச் சூழலில், விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் ஈரோட்டில் உள்ள தொழிற்சாலை தொழிலாளர்களுடன் எளிமையாகப் புகைப்படம் எடுத்துக்கொண்டது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த ரசிகர்கள், “அப்பா மனைவியை வொர்த் இல்லை என்று சொன்னாலும், மகன் தனது செயல்கள் மூலம் தான் வொர்த் என்பதை நிரூபித்துவிட்டார்” எனப்பாராட்டி வருகின்றனர்.

தற்போது சஞ்சய், சந்தீப் கிஷன் நடிப்பில் ‘சிக்மா’ என்ற அதிரடி ஆக்ஷன் திரைப்படத்தை இயக்கி வருகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியாகத் தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.