மத்தியப் பிரதேச மாநிலம் சிங்ரௌலி மாவட்டத்தில் உள்ள கடசரி கிராமம் அருகே உள்ள ரயில் பாதையில் சனிக்கிழமை நடந்த ஒரு அரிய மற்றும் உணர்ச்சிப்பூர்வமான சம்பவம் சமூக ஊடகங்களில் பரவலாக வைரலாகி வருகிறது. அதாவது ஒரு பசு தண்டவாளத்தில் திடீரென ஓட, அந்த வழியாக வந்த ரயிலின் லோகோ பைலட் அதனை கவனித்து ரயிலின் வேகத்தை குறைத்து நின்றார். இந்தக் காட்சியை பார்த்த பயணிகள் மற்றும் பொதுமக்கள் எல்லோரும் ஆவலுடன் திரும்பிப் பார்த்த இந்த நிகழ்வில், ரயில் ஓட்டுநரின் விரைவு செயல்பாட்டால் ஒரு பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
அந்த வீடியோவில் தெளிவாக, தண்டவாளத்தில் பசு ஓடுவது காணப்படுகின்றது. பின்னால் வேகமாக வந்த ரயிலில் இருந்து தொடர்ந்து ஹாரன் ஒலித்தது. ஆனால் பசு பயத்தில் தண்டவாளத்திலிருந்து நகராமல் நேராக ஓடியது. இந்நிலையில், ரயிலின் லோகோ பைலட் சற்றும் தாமதிக்காமல் விழிப்புடன் ரயிலின் வேகத்தைக் குறைத்து, உடனடியாக பிரேக் போட்டார். இதனால் ரயில் மெதுவாக நகர, பசுவும் உயிர் தப்பியது.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் விரைவாக பரவியுள்ளது. பலரும் லோகோ பைலட்டின் செயலுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். “ஒரு விலங்கின் உயிருக்கும் மதிப்பு தரும் மனிதாபிமான செயல் இது”, “விரைவாக நடந்த தவறு கூட உயிரிழப்பாக மாறியிருக்கும் – ஆனால் அந்த பைலட்டின் புத்திசாலித்தனத்தால் ஒரு உயிர் காப்பாற்றப்பட்டது” என நெட்டிசன்கள் புகழ்ந்து வருகின்றனர். இதன் மூலம், ரயில் பாதைகளில் விலங்குகள் செல்லும் நிலையை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளது.
आगे गाय, पीछे ट्रेन…. ट्रैक पर ट्रेन को आता देख भागने लगी गाय, वीडियो वायरल pic.twitter.com/LcvCWAmlPV
— Abhishek Kumar (ABP News) (@pixelsabhi) July 13, 2025
