தைவானில் நடைபெற்ற ஒரு பொது நிகழ்ச்சியின் போது, அங்குள்ள ஒரு முக்கியக் கோயிலின் தலைவர், அந்நாட்டு அதிபர் லாய் சிங்-டே அருகில் நின்றுகொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக வாந்தி எடுத்த நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சங்கடமான தருணம் அங்கிருந்த கேமராக்களில் பதிவாகி, தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
மேலும் ஒரு முக்கியமான அரசு நிகழ்வில், நாட்டின் உயரிய பதவியில் இருப்பவர் முன்னிலையில் இத்தகைய அசம்பாவிதம் நடந்தது அங்கிருந்தவர்களிடையே திகைப்பை ஏற்படுத்தியது. இந்த விபரீதச் செயலுக்குப் பிறகு, அந்த அதிகாரி தனது செயலுக்காக உடனடியாக வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கோரினார்.
Chairman of Taiwan’s State Temple VOMITS on Taiwan’s PRESIDENT Lai Ching-te
This happened during the traditional event, when the president gives away ‘lucky bags’ to people with snacks and other products pic.twitter.com/96q55FHjDp
— RT (@RT_com) February 18, 2026
“>
இதுகுறித்து அவர் விளக்குகையில், தனது குடும்ப உறுப்பினர்கள் சிலர் சமீபத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், அதன் பாதிப்பு தமக்கும் இருந்ததால் தன்னால் உடல்நிலையைக் கட்டுப்படுத்த முடியாமல் போனதாகவும் தெரிவித்தார். இந்தத் தர்மசங்கடமான சூழலைத் தவிர்க்க முடியவில்லை என்று குறிப்பிட்ட அவர், அதிபரிடமும் நிகழ்வில் கலந்துகொண்ட பிறரிடமும் தனது மனமார்ந்த வருத்தத்தைப் பகிர்ந்துகொண்டார்.
