கேரள மாநிலத்தில் டிசம்பர் 9ஆம் தேதி உள்ளாட்சித் தேர்தல்கள் நடந்தன. கம்யூனிஸ்ட் (LDF), காங்கிரஸ் (UDF), மற்றும் பாஜக (NDA) ஆகிய மூன்று கூட்டணிகள் முக்கியப் போட்டியில் இருந்தன. ஆரம்பத்தில் கம்யூனிஸ்ட் கூட்டணிக்கு அதிக வெற்றி வாய்ப்பு இருப்பதாகத் தெரிந்தாலும், வாக்கு எண்ணிக்கையின் முடிவில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

​காலை 12 மணி நிலவரப்படி, காங்கிரஸ் தலைமையிலான UDF அதிக இடங்களைப் பெற்று மீண்டும் வலுவான சக்தியாக உருவெடுத்துள்ளது. மொத்த கிராம பஞ்சாயத்துகளில் UDF 445 இடங்களிலும், LDF 370 இடங்களிலும் முன்னிலை வகித்தன. மேலும், நகராட்சிகளிலும் UDF 55 இடங்களைப் பிடித்து முன்னிலை வகிக்கிறது. அதே சமயம், கேரளாவில் பெரிய அளவில் செல்வாக்கு இல்லாத பாஜக இந்தக் கூட்டணித் தேர்தலில் மிக முக்கியமான வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது.

குறிப்பாக, திருவனந்தபுரம் மாநகராட்சியில் பாஜக 45 வார்டுகளை வென்றுள்ளது; இன்னும் 6 இடங்களில் வெற்றி பெற்றால், மேயர் பதவியைப் பிடிக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது. முஸ்லிம்கள் அதிகம் உள்ள கோழிக்கோடு மாநகராட்சியிலும் பாஜக 10 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.