அதிமுக மாநாட்டில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு புரட்சித்தமிழர் என்ற பட்டம் வழங்கப்பட்டது. மதுரை வலையங்குளம் பகுதியில் நடைபெறும் அதிமுக மாநாட்டில் எடப்பாடி பழனிசாமியை புரட்சித் தமிழர் என அழைக்க வேண்டும் என பட்டம் வழங்கப்பட்டது. தமிழகத்திலேயே மிகப் பெரிய கட்சி அதிமுக தான் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தொடர்ந்து மாநாட்டில் எடப்பாடி பழனிசாமி உரையாற்றி வருகிறார்..