மதுரை அதிமுக மாநாட்டில் பேசிய அக்கட்சியின் அவை தலைவர் தமிழ் மகன் உசேன்,  கழகத்தினுடைய நிறுவனத் தலைவர்… என்னையெல்லாம் அரசியலிலே ஆளாக்கி அழகு பார்த்த ராமாபுரம் தோட்டம் தந்த ரோஜா மலர், பரங்கிமலை சிங்கம்,  பார்வை போற்றும் தங்கம்,  நம்முடைய அங்கம்,  இதயத்து மன்னன்,  புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களுடைய அருள் ஆசியோடும் – ஒன்றரை கோடி தொண்டர்களை உருவாக்கி மனிதா புனிதராக  இந்த இயக்கத்தை கட்டி காப்பாற்றிய டாக்டர் புரட்சித்தலைவி அம்மா அவர்களுடைய அருள் ஆசியோடும்,

சேலத்து சிங்கம், தென்னாட்டு தங்கம்,  எங்களுடைய  இதயத்தின் அங்கம் அண்ணன் எடப்பாடியார் அவருடைய ஆணைப்படி நடக்கின்ற…. மதுரை மண்ணிலே நடைபெறுகின்ற…. வீர வரலாற்றின் பொன்விழா சிறப்பு மாநாட்டிலே பேசுகின்ற வாய்ப்பை தந்த கழகத்தினுடைய பொதுச் செயலாளர்களுக்கும் – தலைமை கழக நிர்வாகிகளுக்கும் முதற்கண் நன்றி கலந்த வணக்கத்தை தெரிவித்து கொள்கின்றேன்.

வேறென்றும் நான் பேசப்போவதில்லை. காரணம்..?  நம்முடைய அருமை அண்ணன்… மரியாதைக்குரிய பொதுச் செயலாளர் உடைய சிறப்பு உரையை நானும் கேட்பதற்கு தயாராக இருக்கிறேன். எனவே இந்த இயக்கத்தை கட்டி காப்பாற்றியது உண்மையான தொண்டர்கள் தான் என்பதை இந்த மண்ணிற்கு உணர்த்திக் காட்டிய மாநாடு தான் இந்த மாநாடு. மதுரையிலே காலடி எடுத்து வைத்தால் வெற்றி நிச்சயம் என்பது எல்லோருக்கும் தெரியும்.

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 1958-யில் இதே மண்ணிற்கு வந்தார். நாடோடி மன்னன் பட விழாவில் அவரோடு நானும் வந்தேன்.  அந்த புரட்சித்தலைவரோடு இந்த மண்ணுக்கு வந்த அந்த நாளில் இருந்து இன்னைக்கு வரைக்கும் மதுரை மண்ணில் கால் எடுத்து வைத்து சென்றால் ?  வெற்றியோடு தான் திரும்புவார். அதனால் எடப்பாடியார் அவர்கள் நிச்சயமாக வெற்றியோடு…

தமிழகத்தினுடைய முதலமைச்சராக வருவார் என்ற நம்பிக்கை இந்த மாநாட்டின் மூலமாக ஏற்பட்டு இருக்கிறது. இந்த இயக்கத்தை அளிப்பதற்க்கோ  அல்லது இந்த இயக்கத்தை துண்டாக்குவதற்கோ எந்த கொம்பனாலும் முடியாது என்ற சரித்திர சாதனையை உருவாக்கி இருக்கின்ற அற்புதமான மாநாடு தான் இந்த மாநாடு என்பதை இந்த நேரத்திலே சொல்லி கொள்கின்றேன்.