சேலம் மாவட்டத்தில் உள்ள தாதகாபட்டி பகுதியில் சண்முகம் (62) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கொண்டாலம்பட்டி அதிமுக செயலாளராக இருந்த நிலையில், கடந்த 3-ம் தேதி மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் திமுக கவுன்சிலர் தனலட்சுமியின் கணவர் சதீஷ்குமார் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை சதீஷ்குமார் விற்பனை செய்துள்ளார்.

இது தொடர்பாக சண்முகம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். இதனால்தான் அவர் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இந்த கொலை வழக்கில் கவுன்சிலர் தனலட்சுமி, அஜித், மகேந்திரன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர்களுக்கும் தொடர்பு இருப்பதாக தெரியவந்துள்ளது. இவர்கள் தற்போது தலைமறை வாகிவிட்டனர். அவர்கள் கேரளாவில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்துள்ள நிலையில் அங்கு தனிப்படை காவல்துறையினர் விரைந்துள்ளனர். மேலும் ஊட்டிக்கும் ஒரு தனிப்படை காவல்துறையினர் சென்றுள்ளனர்.