மக்களவைத் தேர்தலுக்கான அதிமுக தேர்தல் அறிக்கையை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் மொத்தம் 133 அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளது. அதில் முக்கியமாக ஒவ்வொரு ஏழை குடும்ப தலைவிக்கும் மாதந்தோறும் 3000 ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்க மத்திய அரசை அதிமுக வலியுறுத்தும் எனவும் ஆளுநர் பதவி நியமனம் முறை குறித்து கருத்து கேட்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைப் போலவே பெட்ரோல் டீசல் விலை நிர்ணய முறை, சமையல் எரிவாயு விலை கட்டுப்பாடு, நீட் தேர்வுக்கு பதிலாக மாற்றுமுறை தேர்வு, ரயிலில் பயணச்சடுகை போன்ற பல வாக்குறுதிகள் அதிமுக தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளது