திமுகவுக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படும் 900 கோடி ரூபாய் தேர்தல் நன்கொடை விவகாரம் மீண்டும் விஸ்வரூபமெடுத்துள்ளது. இதுதொடர்பான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில், பிரபல லாட்டரி தொழிலதிபர் சாண்டியாகோ மார்ட்டினுக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள மார்ட்டினுக்குச் சொந்தமான நிறுவனங்கள், அலுவலகங்கள் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் தீவிர சோதனை நடந்து வருகிறது. லாட்டரி மார்ட்டினுடன் தொடர்புடைய சில அரசியல் கட்சி நிர்வாகிகளின் இடங்களிலும் இந்த சோதனை நீடித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இதுகுறித்த சில முக்கியத் தகவல்களைப் போட்டுக்கொடுத்ததாகக் கூறப்படும் நிலையில், தற்போது அமலாக்கத்துறை இந்த வழக்கைத் தீவிரமாகக் கையில் எடுத்துள்ளது அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
900 கோடி திமுகவுக்கு நன்கொடை கொடுத்த விவகாரம் : போட்டு கொடுத்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா : மீண்டும் கையில் எடுத்த அமலாக்கத்துறை :லாட்டரி மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை
சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான வழக்கில், லாட்டரி தொழிலதிபர் சாண்டியாகோ மார்ட்டின்தொடர்புடைய… pic.twitter.com/YiPv5mR75P
— தங்க.காளிப்பாண்டி (@sureshkalipandi) August 8, 2026
“>
தொடர்ந்து நடைபெற்று வரும் இந்தச் சோதனைகளின் முடிவில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் முக்கிய விவரங்கள் குறித்த அதிகாரப்பூர்வத் தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
