தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் வேளையில், சேலம் மாவட்டத்தில் அதிமுகவிலிருந்து விலகி முக்கிய நிர்வாகிகள் திமுகவில் இணைந்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, சேலம் ஆத்தூர் தொகுதியின் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் (MLA) மாதேஸ்வரன் இன்று அதிகாரப்பூர்வமாக திமுகவில் இணைந்தார்.

சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திமுக மாவட்ட செயலாளர் சிவலிங்கம் முன்னிலையில் மாதேஸ்வரன் தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார். அவருக்கு கட்சி நிர்வாகிகள் சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.

முன்னதாக அதிமுகவில் முக்கிய பொறுப்பில் இருந்த மாதேஸ்வரன், கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது அதிமுகவிலிருந்து விலகி அமமுக (AMMK) சார்பில் போட்டியிட்டார். பின்னர் மீண்டும் அதிமுகவில் இணைந்த அவர், தற்போது அந்த கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்துள்ளார். தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஆத்தூர் பகுதியில் இந்த கட்சி மாற்றம் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.