“இபிஎஸ் கோட்டையில் அடுத்தடுத்து விழும் இடி.. தீவிர விசுவாசிகளும் த.வெ.க-வுக்கு ஜம்ப்!” – நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பின், அதிமுகவிலிருந்து த.வெ.க-வுக்கு முக்கியப் புள்ளிகள் தாவும் படலம் தீவிரமடைந்துள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு அடுத்தடுத்து  ஷாக் கொடுக்கும் விதமாக அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் மேலும் இருவர் அதிரடியாகத் த.வெ.க-வில் ஐக்கியமாகியுள்ளனர்!

ஜெயங்கொண்டம் முன்னாள் எம்.எல்.ஏ ராமஜெயலிங்கம் த.வெ.க அமைச்சர் கே.ஏ.எஸ் முன்னிலையிலும், அதைவிடப் பெரிய ட்விஸ்ட்டாக அரக்கோணத்தில் 2011, 2016, 2021 என தொடர்ந்து 3 முறை ஹாட்ரிக் வெற்றி பெற்று இபிஎஸ்-ன் அசைக்க முடியாத தீவிர விசுவாசியாக வலம் வந்த முன்னாள் எம்.எல்.ஏ ரவி, த.வெ.க அமைச்சர் என். ஆனந்த் முன்னிலையிலும் தங்களை அதிகாரப்பூர்வமாக இணைத்துக் கொண்டுள்ளனர்.

“அதிமுக கூடாரமே காலியாகுது ” என்று அரசியல் வட்டாரமே வாயடைத்துப் போகும் அளவுக்கு, கோட்டை மற்றும் ராயப்பேட்டை வட்டாரங்களை ஒரே நேரத்தில் உலுக்கியெடுத்துள்ள இந்த டபுள் விக்கெட் வீழ்ச்சி, த.வெ.க தொண்டர்களை உச்சகட்டக் குஷியில் ஆழ்த்தியுள்ளதுடன், எடப்பாடி பழனிசாமி டீமை செம அப்செட்டில் ஆழ்த்தி பெருத்த அரசியல் த்ரில்லரை ஏற்படுத்தியுள்ளது!