அதிமுகவை மீண்டும் ஒற்றுமையாக்கும் நோக்கத்தில் முக்கிய நகர்வாக, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்), முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுடன் இணைந்துள்ளார்.

“எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் நிர்வகித்த அதிமுக ஆட்சி மீண்டும் மலர வேண்டும் என்றால், பிரிந்து உள்ள அதிமுக சக்திகள் ஒன்றிணைய வேண்டும்” என தெரிவித்துள்ளார் ஓபிஎஸ். இதுவரை வெளிப்படையாகப் பேசாமல் இருந்த நிலையில், செங்கோட்டையனுடன் தொடர்ந்து பேசிக் கொண்டிருப்பதையும், முதன்முறையாக பொதுவெளியில் அவர் அங்கீகரித்துள்ளார்.

மேலும், “அடுத்த வாரம் அவரை நேரில் சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்த உள்ளேன்” என ஓபிஎஸ் கூறியிருப்பது, இருவரும் அரசியல் ரீதியாக இணைந்துவிட்டதை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இந்த இணைப்பு அதிமுக உள்நிலையில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, தற்போது கட்சியில் ஒற்றுமை விவகாரம் மீண்டும் தீவிரமாகப் பேசப்படும் சூழல் உருவாகியுள்ளது. இதன் தாக்கம் எதிர்கால கூட்டணிகளிலும் தேர்தல் அரசியலிலும் பிரதிபலிக்கக்கூடும் என அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.