தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியினை நடிகர் விஜய் தொடங்கிய நிலையில் முதல் இரண்டு மாநாட்டினை பிரம்மாண்டமாக நடத்தி முடித்த நிலையில் திருச்சி மற்றும் அரியலூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். அவருக்கு ஏராளமான தொண்டர்கள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு கொடுத்த நிலையில் இது தொடர்பாக திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மூர்த்தியிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறியதாவது, விஜய்க்கு கூட்டம் வந்தது வெற்றி என அர்த்தமில்லை” எனக் கூறினார்.
“சிறையிலிருந்து வெளியே வந்த சசிகலாவைப் பார்ப்பதற்காகவும் கூட்டம் திரண்டது. கூட்டம் என்றாலே அந்த நபர் வெற்றி பெறப்போறாரென முடிவு செய்ய முடியாது,” என அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார். மேலும் அவர், “2011 ஆம் ஆண்டு, நடிகர் வடிவேலுவை காணக் கூட மக்கள் ‘காடு, கரை’ என திரண்டனர். ஆனால் அதன் அரசியல் தாக்கம் என்னவாயிற்று?” என கேள்வி எழுப்பினார்.
மேலும் “அரசியலில் வெற்றி என்பது வெறும் கூட்டத்தைப் பொருத்தது அல்ல; மக்கள் நம்பிக்கையைப் பெறுவது முக்கியம்” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
