தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக – அதிமுக மோதல் தற்போது அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளது. சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க முதலமைச்சர் விஜய்க்கு ஆதரவாக அதிமுகவின் 25 எம்.எல்.ஏ-க்கள் வாக்களித்த விவகாரம், குதிரை பேரம் என்ற புகாராக வெடித்துள்ளது.
இது குறித்து தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ இன்பதுரை, 1993-ஆம் ஆண்டு நாடாளுமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற ஜே.எம்.எம் (JMM) எம்பிக்களை வளைத்ததற்காக அன்றைய பிரதமர் நரசிம்மராவ் மற்றும் பூட்டா சிங் மீது சிபிஐ வழக்கு பாய்ந்ததைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதே பாணியில், அதிமுக எம்.எல்.ஏ-க்களைக் குறுக்கு வழியில் இழுத்ததற்காக முதலமைச்சர் விஜய் மீதும் சிபிஐ வழக்கு பாய அதிக வாய்ப்புள்ளதாக அவர் பகீர் எச்சரிக்கை விடுத்துள்ளார். எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து கிளம்பியுள்ள இந்த ‘சிபிஐ அஸ்திரம்’, தமிழக அரசியல் களத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
நாடாளுமன்றத்தில் 1993 ல் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற குதிரை பேரம் மூலம் JMM எம்பிக்கள் ஆதரவை குறுக்கு வழியில் பெற்ற அன்றைய பிரதமர் நரசிம்மராவ்,பூட்டாசிங் ஆகியோர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது போன்று, தற்போதும் முதல்வர் @TVKVijayHQ மீது வழக்கு வர வாய்ப்பு…
— I.S.INBADURAI (@IInbadurai) May 15, 2026
“>
